Home » எல் நினோவும் பொள்ளாச்சி தேங்காயும்
நம் குரல்

எல் நினோவும் பொள்ளாச்சி தேங்காயும்

வானிலை ஆய்வு மையங்களின் அறிக்கைகளிலும், செய்தித்தாள்களிலும் மட்டுமே இதுவரை கேள்விப்பட்டிருந்த ‘எல் நினோ’ நிகழ்வு, இப்போது நமது அன்றாட வாழ்க்கைக்குள்ளேயே நுழையத் தொடங்கிவிட்டது. பசிபிக் பெருங்கடலில் உருவாகும் ஒரு காலநிலை நிகழ்வுக்கும் பொள்ளாச்சியின் தென்னந்தோப்புகளுக்கும் என்ன தொடர்பு?

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் நிகழ்வுதான் எல் நினோ எனப்படுகிறது. இதன் விளைவாக, உலகின் பல பகுதிகளில் வறட்சி, அதிக வெப்பம், குறைவான மழை அல்லது எதிர்பாராத மழைப்பொழிவு போன்ற காலநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

இந்திய விவசாயம் பெருமளவில் பருவமழையைச் சார்ந்தே இயங்குகிறது. குறிப்பாக, நாட்டின் மொத்த வருடாந்தர மழைப்பொழிவில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தைத் தென்மேற்கு பருவமழையே வழங்குகிறது. எனவே, தென்மேற்கு பருவமழையில் ஏற்படும் சிறிய மாற்றம்கூட நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி உள்ளிட்ட காரீஃப் பயிர்களின் உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!