பெண் விடுதலை, சம உரிமை, பாலினச் சமன்பாடு ஆகிய சொற்களுக்கு உலகளவில் ஒரு முகத்தை உருவகப்படுத்த வேண்டும் என்றால், அது நிச்சயமாக குளோரியா ஸ்டைனம் (Gloria Steinem) தான். எழுத்தை ஆயுதமாகவும், உரையாடல்களைப் புரட்சியாகவும் மாற்றிய இந்த ஆளுமை, சமூகக் கட்டமைப்புகளால் காலங்காலமாகப் பெண்கள் மீது சுமத்தப்பட்ட மௌனத்தை உடைத்தெறிந்தவர்.
‘பெண்களின் இயல்பு மௌனமாக இருப்பதில்லை; மாறாக, அவர்கள் சித்தாந்தங்களாலும் அதிகாரங்களாலும் மௌனமாக்கப்படுகிறார்கள்’ (We are not silent; we are being silenced) என்பது அவர் முன்வைத்த முக்கிய வாதம்.
குளோரியாவின் இளமைக் காலம் நிலையற்றதாகவும் சோதனைகள் நிறைந்ததாகவும் இருந்தது. 1934இல் ஒஹையோவின் டோலிடோவில் பிறந்த குளோரியா, சிறுவயதில் ஒரு டிரெய்லர் வீட்டில் வசித்தார். அவரது தந்தை ஒரு நாடோடி போன்ற வியாபாரியாக இருந்ததால், பன்னிரண்டு வயது வரை குளோரியாவால் பள்ளிக்குச் சரியாகச் செல்லக்கூட முடியவில்லை. 1944இல் பெற்றோர் விவாகரத்து செய்த பிறகு, தனது தாயார் ரூத் உடன் வசிக்கத் தொடங்கினார். பள்ளிக்குச் செல்லவில்லையே தவிர அவர் வாசிப்பைத் தீவிரமாக நேசித்தவர்.
















Add Comment