Home » உரு – 10
உரு தொடரும்

உரு – 10

கருத்தரங்க மேடையில்

சண்டை செய்வோம்

தமிழ் டாட் நெட் குழுவின் உரையாடல்கள், ஆலமரத்தின் கிளைகள் போலப் பிரிந்து தழைத்தன. பண்பாடு, கவிதை, அமானுஷ்யம் என்று தனிப்பொருள் சார்ந்து நிறையக் குழுக்கள் உருவாயின. முத்து போன்ற சிலர் கணினித் தமிழ் சார்ந்த தொழில்நுட்ப உரையாடல்களில் அதிக ஆர்வம் காட்டினர். என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று நீண்டன அந்த உரையாடல்கள். ஆஸ்திரேலியா பாலாவிடம் சொல்லி, இதற்கென்றே ‘வெப்மாஸ்டர்ஸ்’ என்கிற தனிக் குழுவை உருவாக்கினார் முத்து. குழு விவாதங்கள் தமிழ்க் கணிமையை இயக்கமாக வளர்த்தது. பல ஆக்கமான விஷயங்களைச் செய்தது.

‘வெப்மாஸ்டர்ஸ்’ குழுமத்தில் தமிழ் உள்ளீடு முறைகள் பற்றிய விவாதம் முக்கியமானது. தகுதரத்தின் (standardization) அவசியம் பற்றி விரிவாக அலசினார்கள். தகுதரம் இரண்டு விஷயங்களுக்குத் தேவையாக இருந்தது. தட்டச்சு செய்து உள்ளீடு செய்யும் விசைப்பலகையின் இடைமுகத்தைத் (keyboard interface) தரப்படுத்துவது ஒன்று. எழுத்துருக் குறியாக்கம் (encoding) மற்றொன்று. இதில் முக்கியமானது குறியாக்கம்தான்.

‘வெப் மாஸ்டர்ஸ்’ குழு விவாதத்தின் போது முத்து தன்னுடைய குறியீட்டை ஓப்பன் சோர்ஸ் ஆகத் தர முன்வந்தார். ஒருவருடையதை மட்டும் பயன்படுத்தாமல் அனைவருக்கும் பொதுவாக ஒன்றைச் சிந்திப்போம் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது. முத்துவும் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆஸ்கி போல தமிழுக்கென திஸ்கி தரப்பாடு ஒன்றை உருவாக்கினர். (American Standard Code for Information Interchange – ASCII, Tamil Script Code for Information Interchange – TSCII). முனைவர் கல்யாணசுந்தரம், முத்து நெடுமாறன், மணிவண்ணன் இணைந்து எழுதிய இந்த வரைவை அமெரிக்காவுக்கும் அனுப்பிப் பதிவு செய்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!