20 இயற்கையின் காதலன்
சன் நிறுவன வேலையிலிருந்து ஆரக்கிள் நிறுவனத்துக்கு மாறிய போது முதல் கட்ட நேர்காணல்களிலேயே வேலை உறுதியாகிவிட்டது. என்றாலும் பெரிய பதவி, நிறையச் சம்பளம் என்பதால், ஆரக்கிள் நிறுவனத்தின் துணைத் தலைவரை ஒரு முறை சந்தித்து, அவர் ‘சரி’ எனச் சொல்லவேண்டும்.
முத்து, அவரைச் சந்திக்கச் சென்றார். அவர், முத்துவின் ரெசூமே, ரிப்போர்ட்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டே எதையோ எழுதிக் கொண்டிருந்தார். முத்துவின் முகத்தை நேராகக் கூடப் பார்க்காமல், கேள்வி மட்டும் வந்தது.
“நான் ஏன் உங்களை வேலைக்கு எடுக்க வேண்டும்?”
“என்னைப் போல இன்னொருவரை உங்களால் கண்டுபிடிக்க முடியாது” என்று பதிலளித்தார் முத்து.
Add Comment