Home » உரு – 22
உரு தொடரும்

உரு – 22

முத்து நெடுமாறன்

22 பணம் பேசும் மொழி

செல்பேசிகளில் ‘செல்லினம்’ தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது. ஏர்செல் நிறுவனம் சென்னை பாரிஸ் கார்னரில் நாற்பதுக்கு நாற்பதடி அளவில் பிரமாண்டப் பதாகை வைத்து “தமிழில் சொல்லும் போது ஆங்கிலம் எதற்கு?” என்று விளம்பரம் செய்தது. அப்போதே மலையாள மொழிக்குச் செல்லினம் போலவே எழுத்துரு, கீபோர்டு இரண்டையும் செய்திருந்தார் முத்து. சினேகம் என்று பெயர் வைத்திருந்தார். இதெல்லாம் ஆன்ட்ராய்டு, ஐபோன் எல்லாம் அறிமுகமாகாத காலம். முதலில் ஐபோன்கள்தான் அறிமுகமாயின. முத்துவின் தமிழ் எழுத்துருக்கள் முதலில் ஐபோனில்தான் வந்தன.

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் டெவலப்பர்கள் மாநாடு ஒன்றை நடத்தும். அதில் தவறாமல் கலந்து கொள்வார் முத்து. பெருநிறுவன வேலையில் இருந்து விலகிய பிறகும், தொடர்ந்து இத்துறையில் இருப்போருடன் தொடர்பில் இருக்க இம்மாநாடுகள் ஒரு கருவி. புதிய நுட்பங்கள், அறிவிப்புகள் பற்றித் தெரிந்து கொள்ளவும் நல்வாய்ப்பு. உலகளாவிய டெவலப்பர்கள், ஆப்பிள் பயனர்கள் கொண்டாடும் ஒரு வார நிகழ்வு அது. முத்துவுக்கு, ஸ்டீவ் ஜாப்ஸ் பேச்சை நேரில் கேட்பது பிடிக்கும். எழுத்துரு வடிவமைப்பாளராக, அழகியலில் நாட்டம் கொண்டவராக, வெற்றிகரமான தொழில்முனைவராக ஸ்டீவ் ஜாப்ஸ், முத்துவுக்கு மிகப் பிடித்த மனிதர்.

ஆப்பிள் நிறுவன அதிகாரிகள், ஐபோன்களில் தமிழ் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்தில் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. முத்துவைப் போலப் பலர் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தனர். ஆப்பிள் நிறுவன அதிகாரிகளுடன் தன்னுடைய பன்னாட்டுப் பெருநிறுவன வேலை மூலம் முத்துவுக்கு அறிமுகம் இருந்தது. ஆனால், எழுத்துரு வடிவமைப்பாளராக அறிமுகம் ஏற்பட்டது சிங்கப்பூர் அரசின் மூலம்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!