26. திறமைக்கு மரியாதை
முத்துவின் முயற்சிகள் அனைத்தும் சாதனைகள்தாம். பல கோடிப் பேர் பயன் பெறும் செயல்களைச் செய்திருக்கிறார். கூகுள், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளார். முன்னுதாரணத் தொழில்முனைவராக உயர்ந்துள்ளார். ஆனால், தொழிலதிபர் ஆனாரா?
அந்தக் கோணத்தில் அவர் யோசிக்கவில்லை என்பதே யதார்த்தம். அதற்கு முக்கிய காரணம், தமிழ் உணர்வே அவர் சிந்தனையில் மேலோங்கியிருந்தது. தமிழ் மீதுள்ள பற்றும் ஆர்வமும் உந்தித் தள்ளியதால் பலவற்றைச் செய்தாரே அன்றி பொருளீட்டும் உந்துதல் இல்லை.
தன்னுடைய பன்னாட்டுப் பணியை விட்டபிறகும் கூட பெருநிறுவனமாக மாற்றும் எண்ணத்தோடு முழுமூச்சில் இறங்கவில்லை. வேலை தேடிக்கொண்டேதான் எழுத்துரு சார்ந்த பணிகளை மேற்கொண்டார். அக்காலகட்டத்தில் தொழில்நுட்ப உலகில் அவருக்கிருந்த சவால்களைக் குறைத்து மதிப்பிடலாகாது.
Add Comment