வேட்டி கட்டிய தமிழன்
ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. உலகெங்கும் இருந்து தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழுக்காகப் பணி செய்வோர் அனைவரும் கூடியிருந்தனர்.
பிரான்ஸிலிருந்து வந்து ஒருவர் கட்டுரை வாசித்தார். சிங்கப்பூர் எழுத்தாளரும் ஆசிரியருமான நா.கோவிந்தசாமி ஒரு கட்டுரையை வாசித்தார். தமிழ்க் கணிமையில் முக்கியமான ஆளுமை அவர். துணைவன் எழுத்துரு உருவாக்கிய ரவீந்திரன் பால், மாநாட்டில் ஒரு செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.
அந்த மாநாட்டுக்கு முத்துவின் கண்டுபிடிப்பு பற்றிக் கட்டுரை அனுப்பச் சொன்னார் அவர் தந்தை முரசு நெடுமாறன். முத்துவும் அனுப்பி வைத்தார். மாநாட்டில் கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் ஆளுமைகள் நிறைந்திருந்த மாநாட்டில் இளைஞர் முத்துவும் பங்கெடுத்தார்.
Add Comment