அந்தப் பதின்மூன்று திக்திக் தினங்களைத் தெரியுமா? மானுட குலம் அச்சத்தின் விளிம்புக்கே சென்று திரும்பிய இரு வாரங்கள் அவை! நிஜப் பேய்க்கதையொன்று சொல்லப் போகிறோம். வானியல் வரலாற்றுடன் நிச்சயம் தொடர்புள்ள கதைதான் .
அமெரிக்காவில் ஜோன் எஃப் கென்னடி ஆட்சியிலிருந்தார். 1962, அக்டோபர் மாதம். உலகத்தின் பாதுகாவலனாகத் தன்னைத் தானே நியமித்துக்கொண்ட அமெரிக்கா, தனது வழமையான களப்பணியில் ஈடுபட்டிருந்தது. கியூபாவின் வான் பரப்பு மீது ரகசியமாகப் பறந்து கொண்டிருந்தது அதன் உளவு விமானம்.
உங்களுக்குத் தெரியும். கியூபா என்பது அமெரிக்காவுக்கு என்றைக்கும் ஜீரணிக்க முடியாத கம்யூனிஸ ராஜ்ஜியம். அதிபர் காஸ்ட்ரோவோ நிரந்தர எதிரி. சத்தமேயில்லாமல் செல்லும் விமானங்களெல்லாம் அன்றைக்குப் பழைய தொழில்நுட்பங்களாக இருந்தமையால் யாருமே பறக்கும் ஒற்றனை அவதானித்திருக்க வாய்ப்பில்லை. வானிலிருந்து உளவாளி விமானம் எடுத்த புகைப்படங்களில் ஏதோ ஒரு வித்தியாசம்.
“இருக்கிறது. நிச்சயம் ஏவுகணைத் தளமொன்று இந்த இடத்தில் இருக்கிறது.”
Add Comment