Home » லைக், ஷேர், சப்ஸ்கிரைப்
இந்தியா

லைக், ஷேர், சப்ஸ்கிரைப்

மத்திய அரசு, படைப்பாற்றல் பொருளாதாரத்துக்காக 8300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் இதை அறிவித்தார். இந்தியாவில் படைப்பாற்றல் துறைக்கென ஒரு தொழில்நுட்பக் கழகம் (IICT) தொடங்கப்பட இருக்கிறது. மும்பையில் 391 கோடி செலவில் உருவாகும் இந்தக் கழகம், இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

WAVES எனப்படும் ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்பத்துக்கான உலகளாவிய ஒருங்கிணைப்பு நிகழ்வு, மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெற உள்ளது. அதற்கான முஸ்தீபாக இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. WAVESக்கு முன்னோடியாக Create india challenge ஆகஸ்ட் 2024 இல் தொடங்கப்பட்டது. 25 போட்டிகளைக் கொண்ட சவாலில், படைப்புக்களம் சார்ந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. அனிமேஷன் குறும்படங்கள் இயக்குவது, படத்தொகுப்பு செய்வது, இன்ஸ்டா ரீல்ஸ் உருவாக்குவது, சிம்பனி இசையமைப்பது இவற்றில் அடக்கம். இப்போட்டிகளில் வென்ற 1000 போட்டியாளர்கள்தாம் WAVES மாநாட்டுக்குத் தேர்வாகியுள்ளனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!