Home » சாலையெல்லாம் சார்ஜர்கள்!
இன்குபேட்டர்

சாலையெல்லாம் சார்ஜர்கள்!

பெட்ரோல், டீசல் போன்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு எரிபொருள் தீர்ந்தால் பெட்ரோல் பங்க் போவோம். டாங்க்கினை நிரப்ப ஒருசில நிமிடங்கள் மட்டுமே தேவை. உள்ளே போய்ப் பணத்தைக் கொடுக்க மேலும் ஒருசில நிமிடங்கள். இங்கிலாந்தில் இப்போதெல்லாம் பல பெட்ரோல் நிலையங்களில் பங்க்கிலேயே கடனட்டை மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம். அதனால் உள்ளே போய்ப் பணம் கொடுக்கும் நேரமும் வீணாவதில்லை. ஆனாலும் இவ்வாகனங்கள் நமது சூழலை மாசு படுத்துன்றன என்பது அனைவரும் அறிந்ததே. பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்கள் உற்பத்தி செய்வதை முழுவதுமாக நிறுத்துவற்கான காலக்கெடுவினை வைத்திருக்கின்றன. இதற்குப் பதிலாக அதிவேகமாக உருவாகி வரும் தொழில்நுட்பம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள். காரில் ஆரம்பித்து இப்போது பஸ், ட்ரக் போன்ற கனரக வாகனங்களும் மின்சாரத்தில் இயங்கும்படியாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் புகை விட்டுச் சூழலை மாசுபடுத்தாது. அமைதியாகப் போவதனால் சத்தமும் இருக்காது. ஆனால் சார்ஜ் தீர்ந்து போனால் அதை எங்காவது சார்ஜிங் நிலையத்தில் சார்ஜ் பண்ண வேண்டும். சிறிது சிறிதாக பொது சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் சில வருடங்களில் இப்போது பெட்ரோல் நிலையங்கள் இருப்பது போல நிறையவே சார்ஜிங் நிலையங்கள் வரலாம். அது மட்டுமல்லாது வீட்டிலும் சார்ஜ் பண்ணிக் கொள்ளலாம். எது எப்படியிருந்த போதும் ஒரு வாகனத்தின் பேட்டரியைச் சார்ஜ் செய்வது நிமிடங்களில் முடிக்கும் காரியம் அல்ல. சில மணி நேரங்களும் எடுக்கலாம். இது மின்சாரக் கார்கள், பஸ்கள் டிரக்குகள் போன்றவற்றின் மிகப் பெரிய பலவீனம். முக்கியமாக, நீண்டதூரப் பயணம் செல்லும் போது எங்கே சார்ஜ் பண்ணப் போகிறோம் எனும் திட்டமிடலும் அவசியமாகிறது.

இதற்கான ஒரு தீர்வு விரைவில் வரவாய்ப்புள்ளது. மின்சாரக் கார் வாங்குகிறீர்கள். அதை நீங்கள் சார்ஜ் பண்ணவே தேவையில்லை என்றால் எப்படி இருக்கும்? காற்றிலிருந்தா சக்தி கிடைக்கப் போகிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். கிட்டத்தட்ட உண்மையும் அதுதான். காற்றிலிருந்து கிடைக்கப் போவதில்லை. ஆனால் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் கிடைக்கப் போகிறது. நீங்கள் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் போகும் சாலை உங்கள் காரைத் தொடர்ந்து வயர்லெஸ் சார்ஜிங் செய்து கொடுக்கும். அதுதான் இந்தத் தொழில்நுட்பம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!