இனிவரும் தலைமுறை மூன்றரை நாள்கள்தான் வேலை செய்யப்போகிறது எனச் சொல்லியிருக்கிறார் ஜேமி டைமன். அமெரிக்கப் பன்னாட்டு நிதிச் சேவை ஜேபி மோர்கனின் தலைவராயிற்றே இவர். சரியாகத்தான் கணித்திருப்பார் என நம்பலாம். அவருடைய நிறுவனத்திலேயே இப்போது பெரும்பாலும் ஜெனரேடிவ் ஏஐ எனப்படும் செய்யறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
இன்னும் நூறு வருடங்களுக்குள் நம் சந்ததிகள் வேலை பாதி ஓய்வு பாதி என வாழப்போகிறார்களாம். அதுவம், கேன்சர் வந்து சாகாமல் நூறு வயது ஆயுளுடன். அது சரி, ஐந்து நாள் வேலை இரண்டு நாள் ஓய்வு வழக்கம் வந்தே இன்னும் நூறாண்டுகளைத் தொடவில்லை.
பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரிட்டன் தொழிலதிபர் ராபர்ட் ஓவன்தான் இரண்டு நாள் விடுமுறை வழக்கத்தைக் கொண்டு வந்தது. ஜவுளிக் கடை உற்பத்தியாளர். சமூகவுடைமையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். தொழிலாளர்களுக்கு நல்லது பல செய்தவர். அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்குக் குரல் கொடுத்துப் போதும் நிறுத்துங்கள் என முழங்கினார்.
Add Comment