பிரம்மபுத்திரா நதியில், பெரிய அணை ஒன்றைக் கட்டுகிறது சீனா. இதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது இந்தியா. தன்னாட்சி பெற்ற திபெத் பகுதியில் உருவாகும் இந்த நீர் மின்சாரம் தயாரிக்கும் அணைத் திட்டம் உலகிலேயே மிகப்பெரியது. இதைப் பற்றி இந்தியாவுக்கு இருக்கும் கவலை அதைவிடப் பெரியது.
சீனா கட்டும் இந்த யார்லுங் சாங்போ அணை திட்டத்தின் மதிப்பு ஏறக்குறைய டிரில்லியன் யுவான். சுமார் 137 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலே. இதற்கு முன்பு யாங்ட்ஸி நதியில் திரி காட்ஜஸ் அணை என ஒன்றைக் கட்டினார்கள். அதுதான் இருப்பதிலேயே பெரிய நீர் மின் தயாரிப்பு அணை. இருபதாண்டுகள் கூட முடியவில்லை. அதற்குள் ஏகப்பட்ட இயற்கை இடர்களை இந்த அணை உருவாக்கிவிட்டது. இந்தப் பெயரை கூகுளில் போட்டாலே அணை எப்போது சரியும் எனத் தேடச் சொல்லிப் பரிந்துரைக்கும். சுமார் நாற்பது கோடி மக்களுக்கு எந்த நேரமும் ஆபத்தை விளைவிக்கலாம் என அஞ்சுகிறார்கள்.
தற்போதைய யார்லுங் சாங்போ திட்டத்தில் இந்த திரி காட்ஜஸை விட மூன்று மடங்கு அதிக மின்சாரம் தயாரிக்கமுடியும். மெடாங் பகுதியில் சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த அணை தொபுக்கடீர் எனப் பல ஆயிரம் அடிகள் கீழே விழுந்து ஓடுகிறது. இப்படி விழுவதால் நீரின் வேகம் மின்சாரம் தயாரிக்க ஏதுவாக இருக்கிறதென 2020ஆம் ஆண்டிலேயே சீன அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தனர். இந்த 50 கிலோ மீட்டர் தூரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டி மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடுகிறார்கள்.
Add Comment