Home » அகிலம் கொண்டாடும் ஆடி
திருவிழா

அகிலம் கொண்டாடும் ஆடி

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆடி மாதம் என்பது பண்டிகைகளின் மாதம். ஒவ்வொரு நாளும் மக்கள் கொண்டாட ஏதாவதொரு விசேஷம் இருக்கும். ஆடிச் செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, பூரம், பெருக்கு எனப் பலவிதமான கொண்டாட்டங்கள். ஆடிப் பதினெட்டு அன்று நடைபெறும் ஆடிப்பெருக்கு, நதியோர மாவட்டங்களில் இன்னும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மனுக்கும் இதர பெண் தெய்வங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ஆடிப் பெருக்கன்று காவிரி ஆற்றங்கரையில் மக்கள் குடும்பங்களாகக் குழுமி, காவிரித்தாயை வணங்கிப் படையல் வைத்து, தங்கள் குடும்ப விழாவாகக் கொண்டாடுவார்கள். இந்த நாளின்போது காவிரித் தாய் பிள்ளைப்பேற்றுடன் இருப்பதாகக் கருதி பதினெட்டு வகை அன்னங்கள் சமைத்துப் படையலிட்டுக் கொண்டாடுவது வழக்கம். படையலிட்ட உணவைத் தாங்களும் உண்டு, முன்பின் அறியாத மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வார்கள். விவசாயிகள் இந்த நாளன்று தங்கள் உழவைத் தொடங்குவதும் வழக்கம்.

தமிழகத்தில் இப்படியிருக்க மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் இதே காலகட்டத்தில் நடைபெறும் விழாக்களும் கொண்டாட்டங்களும் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!