சிவகார்த்திகேயன் – ஜெயம் ரவி நடித்த பராசக்தி திரைப்படத்தின் முதல் காட்சி. காலம் 1959. இடம் – புதுவாடி, திருச்சிராப்பள்ளி. இந்தித் திணிப்புக்கு எதிரான ஒரு போராட்டம். ஒரு ரயிலைப் போராட்டக்காரர்கள் மறித்துத் தீயிட்டுக் கொளுத்துவார்கள்.
கதைப்படி அது ஒரு நிலக்கரி ரயில். அதில் காண்பிக்கப்படும் ரயில் நிலையம் கொழும்பிலுள்ள ரயில் நிலையம். டைட்டில் கார்டுக்குப் பிறகு வருகிற ரயில் காட்சிகள் கூட கொழும்பில் இருக்கின்ற இடங்கள்தான். இலங்கையில் இன்னமும் ஓடக்கூடிய நிலக்கரி இன்ஜினும், அந்தக் கால ரயில் பெட்டிகளும் உண்டு.
இலங்கையில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுமானங்கள் இப்போதும் உயிர்ப்புடனேயே இருக்கின்றன. பெரும்பாலானவற்றின் தோற்றம் கூட மாறவில்லை. இது முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தை மீளுருவாக்கம் செய்வதற்கு ஏதுவாக இருக்கிறது.
















Add Comment