Home » எது என் ஆவணம்?
இந்தியா

எது என் ஆவணம்?

இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட்டைக் குடியுரிமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சமீபத்தில் மீண்டும் தெரிவித்திருக்கிறது. ஒருவர் இந்தியக் குடிமகன்தானா எனப் பல்வேறு கட்ட சோதனைகள் மூலமாகச் சரிபார்த்த பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணங்களில் இவர் இந்தியர்தான் என அடையாளப்படுத்தப்படவும் பாஸ்போர்ட்தான் பிரதானமான ஆவணமாக இருக்கிறது. ஆனாலும் பாஸ்போர்ட்டை ஆதாரமாகக்கொள்ளக்கூடாது எனச் சொல்வதற்குச் சில அடிப்படை காரணங்கள் இருக்கின்றன.

பாஸ்போர்ட் சட்டம் 1967 – பிரிவு 20இன் படி, இந்தியக் குடியுரிமை இல்லாதோருக்கும் குறிப்பிட்ட சில சூழல்கள் கருதி மத்திய அரசின் ஒப்புதலோடு பாஸ்போர்ட் வழங்க முடியும். எனவே தர்க்கரீதியாகவும் பாஸ்போர்ட் என்பது இந்தியக் குடியுரிமைக்கான சான்றாக இருக்க முடியாது. இரண்டாவதாக, பாஸ்போர்ட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் தவறானதாகவோ உண்மைக்குப் புறம்பாகவோ இருக்கும்பட்சத்தில் அந்த பாஸ்போர்ட்டைச் செல்லாததாக அறிவிக்க முடியும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Natarajan Panchanatham says:

    இதையல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறுபவர்கள் எதை ஏற்றுக் கொள்ளலாம் என்ற சொல்லமுடியாத நிலைதான் இருக்கிறது.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!