Home » குட்பை இராக்!
உலகம்

குட்பை இராக்!

இராக்கில் கடந்த 23 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் வரும் செப்டம்பருக்குள் முழுமையாக வெளியேறுகிறது. வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், இராக் பிரதமர் அலி அல்-ஜைதியும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் இராக்கில் நீண்டகாலமாக நீடித்த அமெரிக்காவின் ராணுவ இருப்பு முடிவுக்கு வருகிறது.

​இராக்குடனான அமெரிக்காவின் உறவை சதாம் உசேனுக்கு முன், பின் என இரண்டாகப் பிரிக்கலாம். 1979ஆம் ஆண்டு சதாம் உசேன் இராக்கின் அதிபராகப் பொறுப்பேற்றார். அதே காலகட்டத்தில் இரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டு அமெரிக்காவுக்கு எதிரான ஆட்சி அமைந்தது. இதனால் 1980இல் இரான்-இராக் போர் தொடங்கியபோது அமெரிக்கா சதாமைத் தனது கூட்டாளியாகப் பார்த்தது. அவருக்கு ராணுவ ஆதரவையும் உளவுத்துறைத் தகவல்களையும் தொடர்ந்து வழங்கியது.

1990ஆம் ஆண்டு சதாம் உசேன் திடீரென ​குவைத்தின் மீது படையெடுத்தார். இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்காவுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. இதனால் அமெரிக்கா நேரடியாகப் போரில் குதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த வளைகுடாப் போரில் அமெரிக்கா தலைமையிலான சர்வதேசக் கூட்டணிப் படைகள் இராக் படைகளைத் தோற்கடித்து குவைத்திலிருந்து முழுமையாக வெளியேற்றின. இந்தப் போர் அமெரிக்க-இராக் இடையிலான உறவைத் தலைகீழாக மாற்றியமைத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!