டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற சோனம் வாங்சுக்கின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம், இந்திய அரசியல், கல்வி மற்றும் சமூகத் தளங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது போராட்டம் தடுக்கப்பட்டு, அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது மக்கள் மத்தியில் மேலும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இதன் பின்னணி மிகவும் தீவிரமானது.
இந்தியா முழுவதும் அண்மையில் நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான நீட் உள்ளிட்ட முக்கிய தேசியப் போட்டித் தேர்வுகளில் நிகழ்ந்த வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகள் நாட்டையே உலுக்கின. லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டதுடன், முறைகேடுகள் தொடர்பான சர்ச்சைகள் பல மாணவர்களிடையே கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தின. மேலும் இதே காலகட்டத்தில் பதிவான மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்களும் பொது விவாதங்களாயின.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையையும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களையும் கொண்டுவர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற இயக்கம் டெல்லி ஜந்தர் மந்தரில் 2026 ஜூன் 6ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கியது.
















வணக்கம்
மெட்ராஸ் பேப்பர் இவ்வார இதழ். சோனம் வாக்சுக் உண்ணாவிரதம் குறித்த செய்திகள் அனைத்து பத்திரிகைகளிலும் வந்த வண்ணம் இருந்தாலும் அவரைக் குறித்த கடந்த கால செய்திகளையும் அவர் குறித்த விவரங்களையும் இன்று வெளியாகியிருக்கும் கட்டுரை விவரிக்கிறது.
பாபநாசம் நடராஜன்