Home » மாற்றிக் காட்டிய எக்ஸ்போ
உலகம்

மாற்றிக் காட்டிய எக்ஸ்போ

மாற்றுத்திறனாளிகளுக்கான  ‘அக்சஸ் எபிலிட்டிஸ் எக்ஸ்போவின் 2024’ (Access Abilities Expo 2024) கண்காட்சி துபாயில் நடந்து முடிந்துள்ளது. எந்த இடமாக இருந்தாலும், எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும். அது சொகுசு அல்ல, அடிப்படை என்பதை துபாய் அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. தம் மக்களுக்காக சிறப்பான பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அதில் மும்முரமாக வேலை செய்தும் வருகிறது.

ஒவ்வொரு கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலி செல்லத் தனிப் பாதை அமைக்க வேண்டும் என்ற சட்டமே இங்கு உள்ளது. மால், பூங்கா என்று எங்கு சென்றாலும் சக்கர நாற்காலி செல்ல வசதி இல்லாமல் இருக்காது. எல்லா இடங்களிலும் நாற்காலிகள் கிடைக்கும் வசதி இருக்கிறது. மாலுக்கு வரும் முதியவர்களும் உபயோகித்துக் கொள்ளலாம்.

இது மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல ஆட்டிஸம் குழந்தைகள், சிறப்புக் குழந்தைகள் என்று அனைவரையும் மனத்தில் கொண்டு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு துபாயின் மிகப் பெரிய நூலகமான முகம்மது நூலகத்தில் ஆடிஸ்டிக் குழந்தைகள் படிப்பதற்கான விசேஷமான இடம் இருக்கிறது. கண் பார்வை அல்லாதோர் படிப்பதற்கான சிறப்பு நூலகமும் உள்ளது. ஒவ்வொருவர் தேவைக்கும் இங்கு வசதிகள் உள்ளன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!