வேலைப்பளு வாட்டியெடுத்துக்கொண்டிருந்த ஒரு நாளில், `வாழ்க்கை இப்படியே அலுவலக மேஜையோடேயே போய்விடுமா, இதர தனிவாழ்வுத் திட்டங்களை எப்படித் தீர்ப்பது, இல்லை பழையபடியே துபாய்க்குப் போய், வாரம் நான்கு நாள்கள் வேலை பார்த்து, வரியில்லாச் சம்பளம் வாங்கலாமா, ராகு கேதுப் பெயர்ச்சி வேறு வருகின்தே` என்று பல்வேறு யோசனைகள் மேலோங்கியிருந்தது. அது அன்றைய இரவை உறக்கம் வராத இரவாகச் செய்தது. யூட்யூபிற்குப் போய் நம் ஜோசியர்களைப் பார்ப்பதைவிட மேலேறி வந்துகொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தளம் எதனிடமாவது கேட்கலாமே என்று கூகுள் அண்ணாச்சியின் `பார்ட்` (bard) சன்னலைத்தட்டி `ஏன் தம்பி, சிவராமன் கணேசனுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்?` என்று கேட்டேன்.
அது கூலாக இரண்டு விஷயங்களைச் சொன்னது : முதலில் நான் உனக்கு தம்பியில்லை. இரண்டாவது இதுமாதிரி சங்கதிகளைச் சொல்வதற்கு நான் ஆளில்லை. வேண்டுமானால் இந்தியாவிலியே இதற்கெல்லாம் என்னையொத்த இன்னொரு சன்னல் இருக்கிறது. அங்கே வேண்டுமானால் விசாரித்துப்பார்.
interesting sir..should not go like junglee rummee..haha
இனி நல்ல ஜோஸியரைத் தேடிப் போய் பார்க்க வேண்டாம். செயற்கை நுண்ணறிவு ஜாதகம் ஜோஸியம் போன்ற மனிதர்களின் நம்பிக்கைகளுக்குள்ளும் நுழைந்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது