Home » ‘தல’ சென்னை!
தமிழ்நாடு

‘தல’ சென்னை!

கூகுள், பேபால், அப்ளைட் மெட்டீரியல்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழகம் இந்த மாதம் பெருமளவில் ஈர்த்திருக்கிறது. எல்லாமே செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தொடர்பானவை.

இத்தனை நிறுவனங்கள் இந்தத்துறை சார்ந்து ஒரே நேரத்தில் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் கால் பதிப்பது இதுவே முதன்முறை. ஆகவே இது மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. வெகு விரைவில், சென்னையும் தமிழ் நாடும் செயற்கை நுண்ணறிவின் தலைநகராக மாறக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

தமிழகத்துக்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக ஆகஸ்ட் 27 (2024) அன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்களான கூகுள், நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதல்வர் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவின் மொத்த செயற்கை நுண்ணறிவுச் சந்தை இப்போது ஏழு முதல் பத்து பில்லியன்களாக உள்ளன. 2027ம் வருடம் இது 22 பில்லியன்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு அதில் பெருமளவுத் திட்டங்களைத் தமிழகத்தில் தொடங்குவதற்கான முதல் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!