கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு
”ப்ளாக் ஃபாரஸ்ட்” என்றவுடன் கேக் நினைவிற்கு வருவது தான் இயல்பு. ஆனால் நாடி, நரம்பு, ரத்தம், சதை என அனைத்திலும் ஏ.ஐ வியாபித்திருக்கும் நபர்களுக்கு படம் வரைவது தான் நினைவிற்கு வரும்.
ப்ளாக் ஃபாரஸ்ட் டீம் தான் “லேட்டண்ட் ட்ஃபூஷன்” (Latent Diffusion) என்றொரு நுட்பத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள். இதுவே இன்று நாம் பயன்படுத்தும் படம் வரையும் ஏ.ஐகளின் டீ.என்.ஏ. விதவிதமாய் பல்வேறு சாஃப்ட்வேர்கள் இன்று வந்துவிட்டாலும் அவற்றின் ஆதாரமாக இதுவே உள்ளது.
“ட்ஃபூஷன்லாம் வாசிக்கவே சிரமமா இருக்கே… இதெல்லாம் எதுக்கு இப்பச் சொல்ற…?” என்றால் விஷயம் ஒன்று இருக்கிறது.
இந்த வாரம், இந்த ப்ளாக் ஃபாரஸ்ட் டீம் புத்தம் புதிய ஜென் ஏ.ஐ மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
“அதான் டெய்லியுமே இப்ப ஒரு மாடல் வருதே…?” என்று பத்தோடு பதினொன்றாக இதை ஒதுக்கிவிட முடியாது.
ப்ளாக் ஃபாரஸ்ட் தங்கள் மாடலுக்கு ஃப்ளக்ஸ் (Flux) எனப் பெயரிட்டுள்ளது. இந்த ஃப்ளக்ஸ் மாடல் நாம் கொடுக்கும் ப்ராம்ப்ட்டிற்குப் படம் வரைகிறது. ஓப்பன் சோர்ஸ் மாடலாக ஃப்ளக்ஸ் வெளிவந்துள்ளது.
Add Comment