மாற்றம் ஒன்றே மாறாதது
ஏஐ நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எத்துறையானாலும் போட்டி இயல்பு தான். ஆனால் ஏ.ஐயைப் பொறுத்தவரை கூடுதல் சிக்கல் ஒன்றுள்ளது. அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம். அம்மாற்றத்தின் நிகழ்வேகம்.
இப்போது ஏ.ஐ மாறிக்கொண்டிருக்கும் வேகத்தில் வேறெந்தத் துறையும் மாறுவதாய்த் தெரியவில்லை. இச்சூழலில் ஒரு நிறுவனம் தன்னை நிலைநிறுத்திக்கொள்வது மிகவும் கடினம்.
ஒரு நிறுவனம் “வாவ்…” என புருவமுயர்த்த வைக்கும் வசதியொன்றை அறிவிக்கிறது. இது தான் அல்ட்டிமேட் என்று பயனர்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் அடுத்த சில நாள்களுக்குள்ளாகவே அதனை மிஞ்சும் இன்னுமொன்று வந்துவிடுகின்றது.
மிகச் சரியாக இது தான் இந்த வாரமும் நிகழ்ந்துள்ளது. ஏ.ஐ உலகின் இந்த வாரப் பேசுபொருள் “மெட்டா கனெக்ட்”. மெட்டா நிறுவனத்தின் அடுக்கடுக்கான ஏ.ஐ அறிவிப்புகள். சென்ற வாரம் யூ-ட்யூப் சில வசதிகளை அறிவித்தது. அதனை மிஞ்சும் வகையில், இந்த வாரம் மெட்டாக்காரர்கள் கலவரப்படுத்தியிருக்கின்றனர்.
Add Comment