கனியுதிர் காலம்
“இவங்கல்லாம் சொல்ற அளவுக்கு ஏஐ வொர்த் தானா…? இல்ல ஐடி கம்பெனிகள் பண்ற மார்க்கெட்டிங் வித்தையா?” இப்படியொரு ஐயம் பலருக்கும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஏஐ. பல் துலக்கும் ப்ரஷ் முதல் பருவநிலையைக் கணிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் வரை. உண்மையில் ஏஐயின் தாக்கம் என்ன? தொடர்ந்து இது நீடிக்குமா?
நேற்று வரை ஒன்று நம்மால் இயலாததென்றிருக்கும். ஒரு புதிய தொழில்நுட்பம் முளைக்கும். இயலாது என்று நாம் எண்ணியிருந்தது எளிமையான ஒன்றாகிப் போகும். ஏஐ தான் என்றில்லை. கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும். கட்டிங் எட்ஜ் என்றால் புத்தம் புதிய. அன்றலர்ந்த.
இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம். மின்சாரத்திற்கு முன், மின்சாரத்திற்குப் பின் என்று மனிதர்களின் வாழ்க்கை முறையை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் வரும்முன் வெளிச்சம் கூட நம் கட்டுப்பாட்டில் இல்லை. மிக முனைந்து ஒளியை உருவாக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று இச்சிக்கல் இல்லை. மின்சாரத்திற்கு நன்றி.
Add Comment