Home » மகாராஜா ஜாம் சாஹிப் அஜய் ஜடேஜா
இந்தியா

மகாராஜா ஜாம் சாஹிப் அஜய் ஜடேஜா

அஜய் ஜடேஜா

முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா முன்னாள் நவநகர் சமஸ்தானமான தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரின் மகாராஜாவாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த அரசப் பட்டத்தைப் பெற்றிருப்பவர்களை ஜாம் சாஹிப் என்று அழைக்கிறார்கள். ஜடேஜா வம்ச அரச குடும்பத்தைச் சேர்ந்த தற்போதைய ஜாம் சாஹிப் சத்ருஷல்யாசிங் ஜடேஜா தன்னுடைய சகோதரியின் மகன் அஜய் ஜடேஜாவை தனது ராஜ்ஜியத்தின் வாரிசாக அறிவித்திருக்கிறார். இவர் இளம் வயதில் விவாகரத்து பெற்றவர். குழந்தைகள் இல்லை. எனவே அஜய் ஜடேஜாவை அரசின் அடுத்த வாரிசாக அறிவித்திருக்கிறார்.

‘ஜாம்நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக் கொண்டது அந்த மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.’ என்று தற்போதைய ஜாம் சாஹிப் சத்ருஷல்யாசிங் ஜடேஜா கூறியிருக்கிறார். இவரும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர். 1966-77ஆம் ஆண்டின் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சௌராஷ்டிரா அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்தியா சுதந்தரம் பெற்ற பிறகு பிரிந்திருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை ஒன்றிணைத்த போது முடியாட்சி முடிவுக்கு வந்தது. பல அரசர்கள் தாங்களே முன் வந்து தங்களுடைய சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார்கள். அப்படி இணைத்தவர்களில் ஜடேஜா வம்சத்தின் அப்போதைய அரசரும் ஒருவர். ஆனாலும் இப்போது வரை திருவிதாங்கூர், மைசூர், ஜாம்நகர் போன்ற சில சமஸ்தானங்களின் வம்சாவளிகள் அவர்களுடைய அடுத்த தலைமுறை அல்லது அவர்களுடைய உறவினர்களுக்கு தனிப்பட்ட முறையில் முடிசூட்டி மன்னராக அறிவிக்கும் வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படி தங்களுக்குள் முடிசூட்டிக் கொள்ளும் முறையைத் தற்போது வரை பின்பற்றும் அரசப் பரம்பரையில் ஜடேஜா என்கிற அரசப் பரம்பரையும் ஒன்று.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!