கடந்த மாதம் இருபத்தெட்டாம் தேதி பாராமதியில் ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். பிப்ரவரி ஐந்தாம் தேதி நடைபெறும் ஜில்லா பரிஷத் என்னும் மஹாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிரசாரம் செய்ய பாராமதிக்குத் தனி விமானத்தில் பயணம் செய்தார். தரையிறங்க முயற்சி செய்தபோது ஓடுபாதைத் தரையில் மோதி விபத்து ஏற்பட்டு விமானம் தீ பிடித்தது.
அதில் அஜித் பவார், அவரது உதவியாளர், இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு விமானிகள் என அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டனர். விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அஜித் பவாரின் பதின்பருவத்தின்போதே அவரது தந்தை அனந்த்ராவ் பவார் காலமானார். தந்தை இறந்த பிறகு சித்தப்பா சரத் பவாரின் பாதுகாப்பில் வளர்ந்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு 1982இல் அரசியலுக்கு வந்துவிட்டார்.















Add Comment