அல் அக்ஸாவில் இஸ்ரேலிய ராணுவம். அல் அக்ஸாவில் துப்பாக்கிச் சூடு. அல் அக்ஸாவில் கலவரம். இத்தனை பேர் சாவு. இத்தனை பேர் படுகாயம்.
நேற்று வரை மாதம் ஒருமுறை மேற்படி ஐந்து செய்திகளில் ஏதேனும் ஒன்று நிச்சயம் வந்துவிடும் என்பதே நிலைமை. இப்போது இஸ்ரேலின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சரும் உலகறிந்த அந்த ஊர் பி.எஸ். வீரப்பாவுமான பென்கிவிர் அல் அக்ஸாவுக்கு வந்துவிட்டுப் போயிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக மேற்படி ஐந்தில் – ஐந்துமே இனி அடிக்கடி நேரும் அபாயம் இருப்பதாக மத்தியக் கிழக்கு ஊடகங்கள் எச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றன. பாலஸ்தீனியர்கள், இவ்வளவு நாள் தாக்குப்பிடித்தது பெரிதல்ல; இனி பிராந்தியத்தில் நடமாட முடியுமா என்று கவலைப்படத் தொடங்கியிருக்கிறார்கள். இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதல் இதனைத் தொட்டு அடுத்தக் கட்டத்துக்கு மிக விரைவில் நகரும் போலத் தெரிகிறது.
Add Comment