இரண்டு போதைகள்
அரசியலில் மட்டுமல்ல, தொழில்நுட்பத்திலும் சமூகத்திலும் மாற்றங்கள் நடந்துகொண்டேதான் இருந்தன. 2012ஆம் ஆண்டில் நடந்த இரண்டு நிகழ்வுகள் உலகின் போக்கையே மாற்றிவிட்டன. முதலாவது, மே மாதம் 18ஆம் தேதி ஃபேஸ்புக் பங்குச்சந்தையில் நுழைந்து, அடுத்த எட்டு ஆண்டுகளில் $16 பில்லியன் டாலர் திரட்டியது – கண்ணுக்குத் தெரியும் விற்பனைப் பண்டம் எதுவும் இல்லாமல்.
இரண்டாவது நிகழ்வு, அதே ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் கொலராடோ மாநிலங்கள் மரிஜுவானாவை (கஞ்சா) கேளிக்கை நோக்கத்திற்காகச் சட்டப்பூர்வமாக்கின. நிதி திரட்ட வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவின் பின்விளைவுகளை அப்போது யாரும் யோசிக்கவில்லை.
இந்த இரண்டு விஷயங்களும் உடனடி லாபம் என்ற ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டன. இரண்டுமே மனிதச் சமூகத்தில் ஒரேவிதமான தாக்கத்தை ஏற்படுத்தின. மக்களைத் தனிமைப்படுத்தின. குடும்பங்களைச் சிதைத்தன. ஒரு தலைமுறையை அடிமைகளாக மாற்றின.














Add Comment