சாண்டி
ஸ்டேட்டன் ஐலண்டில் கிம் ஜாய்ஸ் என்றொரு பெண் இருந்தார். பதினைந்து ஆண்டுகளாக கடற்கரை ஓரம் ஒரு தனி பங்களாவில் வசித்து வந்தவர் அவர். புயல் அவ்வளவு கடுமையாக இருக்காது என்று நினைத்தார். ஏனெனில் கத்ரீனா புயலுக்கு முன்பு அதிகாரிகள் வந்து வெளியேற சொன்னார்கள், ஆனால் சாண்டிக்கு முன்பு யாரும் வரவில்லை. அதனால், புயல் மோசமாக இருக்காது என்றுதான் நினைத்தார்.
மாலை 3:30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது அவர் தாயின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் அதற்குள் தண்ணீர் வீட்டினுள் வர ஆரம்பித்துவிட்டது. அவர் தனது இரண்டு பூனைகளுடன் நீந்தி தப்பிக்க முயன்றபோது, இருளில் காதலனிடமிருந்து பிரிந்துவிட்டார்.
“என் பூனைகளை என் வாழ்வில் எந்த மனிதரையும் விட அதிகம் நேசித்தேன், ஆனால் அவற்றைப் பிடித்துக்கொண்டிருந்தால் நான் இறந்துவிடுவேன் என்று தெரிந்தது” என்று நினைவு கூர்ந்தார்.















Add Comment