Home » அதிகார நந்தி – 26
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 26

போலிப் புரட்சி

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் பல சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது.

முதலில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அடுத்து, டிரம்ப் உலகச் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார். அமெரிக்காதான் உலகச் சுகாதார அமைப்பின் நிதி அமைப்புக்கு அடிநாதம். இந்த முடிவு கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகிய இந்தக் காலகட்டத்தை சீனா சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. தனது உலகளாவிய உள்கட்டமைப்புத் திட்டமான ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது.

சீனா ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல நாடுகளுடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொண்டது. எத்தியோப்பியாவில் நைல் நதியின் மீது கட்டப்பட்டு வரும் கிராண்ட் எத்தியோப்பியன் ரெனைசன்ஸ் அணை (GERD) கட்டுமானத்திற்கு சீனா மறைமுகமாக உதவி செய்தது. மேலும் ஆப்பிரிக்காவில் பல திட்டங்களில் முதலீடு செய்தது. சில திட்டங்களில் பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற மனோபாவத்துடன், தனது செல்வாக்கை அதிகரிக்க இந்த முதலீடுகளைத் தொடர்ந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!