Home » அதிகார நந்தி – 27
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 27

எதுவும் சாத்தியமே

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்தபோது மக்கள் மனத்தில் இனம் புரியாத பயம் குடியேறியது.
நியூயார்க் நகரம் முதல் கோர அடியைச் சந்தித்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. சென்ட்ரல் பார்க்கில் 14 கூடாரங்களில் 68 படுக்கைகளுடன் அவசர மருத்துவமனை அமைக்கப்பட்டது. அம்புச் சத்தம் போல ஆம்புலன்ஸ் ஒலிகள் இரவு பகலாகக் கேட்டுக் கொண்டே இருந்தன.

நியூயார்க்கின் ஹார்ட் தீவில் கூட்டு இறுதிச்சடங்குகள் நடந்தன. மத, இன பேதமின்றி கோவிட் தொற்றால் பலியானவர்கள் கொத்துக் கொத்தாகப் பிணப் பைகளில் வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டனர். இதுவே உலகம் முழுவதும் நடந்த காட்சியாக இருந்தது. மனித உறவுகளின் இறுதி விடையளிப்பு கூட தனிமையில் நடக்க வேண்டிய கொடுமை.

மருத்துவமனைகளில் மனதை உருக்கும் காட்சிகள் நிகழ்ந்தன. உயிரின் கடைசி மூச்சை விடும் நோயாளிகள், ஐபேட் திரை வழியாக தங்கள் குடும்பத்தாரைப் பார்த்துக் கொண்டே இறந்தனர். கைகளைத் தொட முடியாமல். கட்டிப்பிடிக்க முடியாமல். கடைசி வார்த்தைகளை நேரில் கேட்க முடியாமல்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!