உலகில் இரண்டு பெரிய மக்களாட்சி நடக்கும் நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இரண்டுமே ஜனநாயக முறையில் ஆட்சி நடக்கும் நாடுகள்தான் என்றாலும் இரண்டின் தேர்தல் முறையும் மாறுபட்டவை. அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.
சின்னச் சின்ன முடிவுகள் எடுக்க வேண்டுமானாலும்கூட வாக்களிப்பு நடத்தும் அமெரிக்காவில், அதிபர் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு வருடங்கள் முன்பிருந்தே தேர்தல் சுரம் ஆரம்பித்துவிடும். அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுத்த வேட்பாளர், தன் துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பார். எனவே தேர்தலானது அதிபர், துணை அதிபர் இருவருக்குமானது.
Add Comment