Home » அமெரிக்க உடலும் இந்திய உதிரமும்
முகங்கள்

அமெரிக்க உடலும் இந்திய உதிரமும்

அமெரிக்காவில் 4 மில்லியனுக்கு மேல் இந்திய அமெரிக்கர்கள் வாழ்கிறார்கள். இது அமெரிக்க மக்கள் தொகையில் 1.35 சதவீதம். மேலோட்டமாகப் பார்க்கையில் 1.35 சதவீதம் சிறியதாகத் தெரியலாம், ஆனால் 2024ஆம் ஆண்டில், அமெரிக்க அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் பலர் இந்த 1.35 சதவீதத்தில் இருக்கும் இந்திய அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிக்கான் வேலியின் முக்கிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ள சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா போன்ற இந்தியர்களின் ஆதிக்கத்தை நாம் நன்கு அறிவோம். இந்த ஆதிக்கம் அமெரிக்க அரசியலிலும் இருக்கிறது.

இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறுவது பல ஆண்டுகளாக நடந்தாலும், 1965இல் இருந்து, இந்தியக் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகமானது. இதற்குக் காரணம் 1946இல், இந்தியர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெறலாம் என்ற திட்டம் அறிமுகமானதே. அப்படிக் குடியேறிய இந்திய அமெரிக்கர்களின் அடுத்த தலைமுறை, அமெரிக்காவில் பிறந்தவர்களானால் அவர்களும் இந்திய அமெரிக்கர்கள் தான்.

2024 நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கியமாகப் பேசப்படும் இந்திய அமெரிக்கர்கள் பற்றிப் பார்ப்போம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • பெருமைக்குரிய விஷயம். கமலா ஹரிஷ் அமெரிக்க அதிபராக மன்னார்குடி ராஜகோபால சுவாமி அருள் புரிய வேண்டும்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!