பத்தடி நீளம். பத்தடி அகலம். ஒரு சிறிய அபார்ட்மெண்ட் அறை. சென்னையின் நெரிசல்களில் இருந்து சற்றே விலகிப் புறநகரில் இருந்தது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு.
அச்சிறு அறையில் பதினைந்து நபர்களுடன் ஒரு மென்பொருள் நிறுவனம் தொடங்கப்படுகிறது. அதன் பெயர் அட்வெண்ட்நெட். இது நிகழ்ந்த வருடம் 1996. இவ்வாறுதான் தொடங்கியது ஶ்ரீதர் வேம்புவின் சாஃப்ட்வேர் சாகசப் பயணம்.
இதிலென்ன சாகசம்?
இந்நிறுவனத்தைத் தொடங்கும் முன் ஶ்ரீதர் சிலிக்கான் வேலியில் இருந்தார். குவால்காம் என்னும் பிரபல நிறுவனமொன்றில் பணி.
வயர்லெஸ் சிஸ்டங்களில் ஶ்ரீதர் வல்லுநர். அவர் குவால்காம் வந்த கதையே சுவாரசியமான ஒன்று.
தஞ்சாவூரில் பிறந்தவர் ஶ்ரீதர். மெட்ராஸ் ஐஐடியில் பட்டம் பெற்றார். மின் பொறியியலை நன்கு கற்றுத் தேர்ந்திருந்தார்.















Add Comment