தாக்குதல் தொடங்கி நாற்பது நாள் வரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்கவில்லை என்ற கோபம் இஸ்ரேலில் உள்ளது. முதலில் பதிலடி பிறகு விசாரணை என்று நெதன்யாகு சொல்லிக் கொண்டிருந்தார். காஸாவில் பெரும்பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து வந்துள்ளன.
இஸ்ரேல் மக்கள் 76 சதமானம் பேர் நெதன்யாகு பதவி விலகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். நீதிமன்ற அதிகாரச் சட்டத்திலும் பிற விவகாரங்களிலும்கூட நெதன்யாகு அதிருப்தியைச் சம்பாதித்து அவருக்கு எதிராகப் பெரிய போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில்தான் போர் குறுக்கிட்டது. சண்டை ஆரம்பித்த பிறகு, பணயக் கைதிகளை மீட்க வேண்டும் என்று போராட்டங்கள் தொடர்கின்றன.
Add Comment