இயங்குவதற்கு நிதி இல்லாமல் தொழில்கூடம் முடங்குவதை அறிவோம். ஒரு நாட்டின் அரசே அப்படி முடங்கியிருப்பதை அறிவீர்களா? அதுவும் முடங்கியிருப்பது மகாகனம் பொருந்திய அமெரிக்க அரசு என்றால் நம்பமுடிகிறதா?!
ஆம், அக்டோபர் 1 முதல் அமெரிக்க அரசு, தன் அன்றாட அலுவல்களுக்கு நிதியில்லாமல் முடங்கிப் போயுள்ளது. இந்த முடக்கத்தின் விளைவாகக் கிட்டத்தட்ட நாற்பது விழுக்காடு (7.5 லட்சம்) அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வேலை இழக்கக்கூடும். அவர்கள் ஊதியமற்ற கட்டாய விடுப்பில் இருந்தாக வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் இதுவே கதி. இதன் காரணமாகப் பல அரசு சேவைகள் மொத்தமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது குறைக்கப்படும்.
எனினும் இன்றியமையாத சேவைகள் அனைத்தும் தொடர்ந்து வழங்கப்படும். எல்லைப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கம், விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு, மருத்துவச் சேவைகள் போன்றவை இவற்றுள் அடங்கும். ஆயினும் இத்துறைகளின் ஊழியர்கள் பெரும்பாலானோர் சம்பளம் இன்றியே பணியாற்ற வேண்டும்.














Add Comment