Home » அன்னபூர்ணாவுக்கு ஐம்பது வயது
வெள்ளித்திரை

அன்னபூர்ணாவுக்கு ஐம்பது வயது

ஏவி எம், சத்யா மூவிஸ், விஜயா வாகினி. உள்ளிட்ட பழம்பெருமை வாய்ந்த ஸ்டுடியோக்கள் இப்பொழுது படத் தயாரிப்பிலேயே இல்லை. பல ஸ்டுடியோக்கள் இப்பொழுது வணிகக் கட்டடங்களாகவும், குடியிருப்புப் பகுதிகளாகவும், மருத்துவமனைகளாகவும் மாறிவிட்டன. இந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தனது பொன்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

1975 இல் நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவால் தொடங்கப்பட்ட இந்தப் படப்பிடிப்பகம் இன்று வரை ஆந்திரத் திரையுலகுக்கு மட்டுமல்ல; இந்தியத் திரைப்படங்கள் அனைத்திற்கும் ஒரு முகவரியாகத் திகழ்ந்து வருகிறது. மெட்ராஸ் பிரெசிடென்சியென இருந்த காலத்தில் அனைத்துப் படப்பிடிப்புத் தளங்களும் சென்னையில் இருந்தன. இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் எனப் பல மொழிப்படங்களின் படப்பிடிப்புகளும் சென்னையில்தான் நடந்து வந்தன. இதில் கலந்து கொள்வதற்காகவே சென்னையைத் தனது புகுந்த வீடாகக் கருதி இங்கு குடியேறிய திரைப் பிரபலங்களும் உண்டு.

படப்பிடிப்புக்காகச் சென்னைக்கு அடிக்கடி வரவேண்டியிருந்ததால் தனது குடும்பம், நண்பர்கள் போன்றோருடன் செலவிட நேரம் மிகக் குறைவாக இருந்தது என நினைத்தார் நாகேஸ்வரராவ். இரண்டு மாநிலங்களும் பிரிந்த பிறகு ஏன் ஆந்திர மக்கள், தெலுங்கு ரசிகர்களுக்கென்று ஒரு ஸ்டுடியோ கட்டக் கூடாது என நினைத்தார். நேரம் குறைவது ஒரு புறமிருக்கத் தனது மாநிலத்திற்குத் தன்னாலான ஒரு வசதி. மக்களுக்கு வேலைவாய்ப்பு, வாழ்க்கையெனப் பலவற்றை யோசித்தார். இருந்த பணம், சொத்துக்கள் எல்லாவற்றையும் முதலீடு செய்து தனது மனைவி அன்னபூர்ணா பெயரில் ஒரு ஸ்டுடியோவைத் தொடங்கினார். தன்னுடைய முதல் காதல் சினிமாதான். அதன் அடிப்படை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தன்னாலான பங்கு என நினைத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!