அநுரகுமார திஸாநாயக்க, சகல அதிகாரமும் அமையப் பெற்ற இலங்கை ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்து சரியாய் ஓராண்டாகின்றது. நிறைய பிளஸ்களும், ஒரு சில தடுமாற்றங்களுமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது ஆட்சி.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுர வென்றபோது, எந்தவிதப் பிரபுத்துவப் பின்னணியுமில்லாத ஒரு இயற்பியல் பட்டதாரி, இலங்கையின் அதியுயர் பதவிக்குத் தேர்வானதை ஒரு புரட்சியாக வர்ணித்திருந்தன செய்தி சேகரிக்க முகாமிட்டு இருந்த சர்வதேச ஊடகங்கள். ஆனால் எல்லாவற்றையும் விடப் பெரிய புரட்சி என்னவென்றால், 2020 நாடாளுமன்றத் தேர்தல் வரை வெறும் மூன்று சதவீத வாக்குவங்கியைக் கொண்டிருந்த ஒரு கட்சியின் தலைவர், ஐந்தாண்டு கால இடைவெளிக்குள் தம் கட்சியை மீளுருவாக்கம் செய்து அதிகாரத்தை எட்டிப் பிடித்ததுதான்.
இரண்டு புரட்சிகளை நடத்தி ஏராளமாய் இழப்புக்களைச் சந்தித்த ஜே.வி.பி கட்சிக்குக் கடைசியில் அநுரகுமார தயவில் ஜனநாயக வழியில்தான் ஆட்சிப் பீடமேற முனைந்தது என்பது இங்கே சிவப்பு மையால் அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.














Add Comment