ஆடுகளம்
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு முகம் உண்டு. ஆனால் முகம் மட்டுமே உடல் அல்ல. ஆப்பிளின் முகம் ஜாப்ஸ். அவரது உழைப்பு சிறப்பானது. ஆனால் அவர் மட்டுமே ஆப்பிள் அல்ல.
ஆப்பிள் இன்றிருக்கும் உச்சத்திற்கு வரப் பலரும் துணையாக இருந்துள்ளனர். சென்ற அத்தியாயத்தில் மர்க்குலா ஆப்பிளின் வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்தார் என்று பார்த்தோம். அவரைப் போலவே பல்வேறு நிபுணர்களும் சேர்ந்து செய்ததுதான் ஆப்பிள் என்னும் ஜாலம்.
ஜாப்ஸின் வீட்டில் தொடங்கியது ஆப்பிளின் பயணம். அங்கேயே இருந்துவிட முடியாதல்லவா? எவருடைய துணையெல்லாம் ஆப்பிளை வளர்க்கும் என்று ஜாப்ஸ் நினைத்தாரோ அவர்களையெல்லாம் தன்னுடன் இணைத்துக்கொண்டார்.















Add Comment