170. நாட்டை உலுக்கிய ராஜன் வழக்கு
அன்று இரவு தன் கணவரை எதிர்பார்த்து சஸ்பென்சுடன் வீட்டில் காத்திருந்தார் திருமதி ரோக்சனா சுவாமி. இரவு ஏழரை மணிக்குத்தான் சுவாமியின் வீட்டில் காவல் டியூட்டி பார்க்கும் காவலர்கள் மாறுவார்கள். எனவேதான் அந்த நேரத்தில் வீட்டுக்கு வரத் திட்டமிட்டிருந்தார் சுவாமி. ஏழரை மணிக்குத் தன் வீட்டுக்கு மாறுவேடத்தில் வந்தார் சுப்ரமணியன் சுவாமி. அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்த நேரத்தில் போலிஸ்காரர் ‘யார் நீங்கள்? எதற்காக வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்குள், வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டார் சுவாமியின் மனைவி. ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி, இந்தியில் ‘ உங்கள் வீட்டு டிவி ரிப்பேரா?’ என்று சுவாமி கேட்க, ‘ஆமாம்! உள்ளே வாருங்கள்!’ என வீட்டுக்குள் அழைத்தார் ரோக்சனா.
போலிஸ் கண்காணிப்பில் இருந்து வந்த தன் வீட்டுக்குள் அரசால் ‘அறிவிக்கப்பட்ட குற்றவாளியான’ சுப்ரமணியன் சுவாமி மாறுவேடத்தில் டிவி சர்வீஸ் என்ஜினியர் போல நுழைந்தார் என்றால் நம்ப முடிகிறதா? அடுத்த ஐந்து நாட்களுக்குத் தனது வீட்டுக்குள்ளேயே மறைந்து இருந்தார் சுவாமி.















Add Comment