Home » Archives for அசோக் ராஜ்

Author - அசோக் ராஜ்

Avatar photo

சாகசம்

துருவம் தொட்டவள்

பதினெட்டு வயதில் தென் துருவத்தை அடைந்த இளம் இந்தியர் என்ற சாதனை படைத்திருக்கிறார் காம்யா கார்த்திகேயன். இச்சாதனையைப் புரிந்த உலகின் இரண்டாவது இளம் வீராங்கனை இவர். பிரதமர் நரேந்திர மோடி காம்யாவுக்குத் தன் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் காம்யா...

Read More
ஆண்டறிக்கை

மூன்று திட்டங்கள்

இவ்வருடம் எனக்கு ஒரு பம்ப்பர் ஆண்டு. ஒருவழியாகத் தொடர்ச்சியாக எழுதுமளவுக்கு முன்னேறியிருக்கிறேன். ஆசிரியர் பாரா இல்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது. கல்லூரி நாட்களிலிருந்து தொடர்ச்சியாக வாசித்தாலும், பெரிதாக எதுவும் எழுதவில்லை. அவ்வப்போது வீறு கொண்டெழுந்து பிளாகில் எழுதுவேன். அதுவும் வருடம் ஒன்று...

Read More
விளையாட்டு

மெஸ்(ஸி)மரிசம்

மெஸ்ஸியின் வருகையில் என்ன எதிர்பார்க்கப்பட்டதோ, அதற்கு முற்றிலும் மாறான பிம்பம் இந்தியாவைப் பற்றி இணையத்தில் பரவத் தொடங்கிவிட்டது. ஹைதராபாத், மும்பை நிகழ்வுகளில் கொல்கத்தா அளவுக்குப் பிரச்சனைகள் இல்லை. ஆனால் கால்பந்துக்கு அவை நியாயம் சேர்த்ததா என்பது கேள்விக்குறியே. உண்மையில் இச்சிக்கல்களுக்கு யார்...

Read More
உலகம்

குற்றம் விளையும் நிலம்

சிறைச்சாலைகளின் அடிப்படை நோக்கம் குற்றம் செய்பவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவது. இது குற்றவாளிக்கான தண்டனை என்பதோடு, அவர்கள் திருந்துவதற்கான ஒரு சந்தர்ப்பம். தனிமையில் சிந்திப்பதன் மூலம் தன் தவறுகளை உணரலாம், இனி திருந்தி வாழும் முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆனால் இதற்கு...

Read More
உலகம்

தடை போட்டுத் தவிர்!

பதினாறு வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய அரசாங்கம். டிசம்பர் பத்தாம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்னாப் சாட், எக்ஸ், திரெட்ஸ் போன்ற பெரும்பாலான ஊடகங்கள் இதில் அடங்கும். முதலில் யூடியூபுக்கு...

Read More
பெண்கள்

சிகரம் தொட்ட சிங்கப் பெண்கள்

இந்திய மகளிர் அணிகளுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருந்துள்ளது. சமீப நாட்களில் பெண்களுக்கான இந்திய விளையாட்டு அணிகள் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டிருக்கின்றன. இந்த வெற்றிகள், விளையாட்டில் மட்டுமல்லாது பிற துறைகளில் செயலாற்றும் பெண்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கும். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான...

Read More
விளையாட்டு

ஆஷஸ் கோப்பை: போட்டியா? போரா?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது. இப்போட்டியில் இங்கிலாந்தை விட அநாயாசமாக பாஸ்பாலை நிகழ்த்திக் காட்டியது ஆஸ்திரேலியா. தற்காலிகக் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் வியூகங்களும் சிறப்பாக இருந்தன. பாட் கம்மின்ஸின் வருகை தாமதமானாலும், அது குறித்த...

Read More
நுட்பம்

இலவச ஏஐ: வரமா, சாபமா?

கடந்த ஜூலை முதல், ஏர்டெல் பயனாளர்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி புரோவை ஒரு வருடத்துக்கு இலவசமாக வழங்குகிறது பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனம். இதைத் தொடர்ந்து கூகுளும், ஜியோ சிம் உபயோகிக்கும் அனைவருக்கும் பதினெட்டு மாதங்கள் ஜெமினி புரோவைக் கட்டணமின்றி வழங்க இருக்கிறது. ஓப்பன் ஏஐ தனது சாட்ஜிபிடி கோ சேவையை அனைத்து...

Read More
விண்வெளி

‘பாகுபலி’ ராக்கெட்

CMS-03 என்ற தொலைத்தொடர்புச் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது இஸ்ரோ. ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நவம்பர் இரண்டாம் தேதி இது ஏவப்பட்டது. கடற்படைக்கான பிரத்தியேகத் தகவல்தொடர்புச் சாதனங்களை இந்தச் செயற்கைக்கோள் கொண்டிருக்கிறது. போர்க்கப்பல்கள்...

Read More
இந்தியா

இங்கே ஜோஹோ, அங்கே கூகுள்: காசும் கணக்கும்

கூகுள் நிறுவனம், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டரை அமைக்க இருக்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் இதற்காக 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருக்கிறது. அதற்கான ஒப்பந்தக் கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!