Home » Archives for பிரபு பாலா

Author - பிரபு பாலா

Avatar photo

இந்தியா

கோட்டைத் தாண்டாதே!

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ராணுவ மோதலைத் தீர்ப்பதில் இந்தியாவும் சீனாவும் ஓர் உடன்படிக்கைக்கு வந்துள்ளன. டெப்சாங் சமவெளி, டெம்சோக் பகுதிகளில் இரு நாடுகளும் பழையபடி ரோந்துப் பணிகளில் ஈடுபடலாம் என ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும்...

Read More
இந்தியா

மகாராஜா ஜாம் சாஹிப் அஜய் ஜடேஜா

முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா முன்னாள் நவநகர் சமஸ்தானமான தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரின் மகாராஜாவாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த அரசப் பட்டத்தைப் பெற்றிருப்பவர்களை ஜாம் சாஹிப் என்று அழைக்கிறார்கள். ஜடேஜா வம்ச அரச குடும்பத்தைச் சேர்ந்த தற்போதைய ஜாம் சாஹிப் சத்ருஷல்யாசிங் ஜடேஜா...

Read More
ஆளுமை

வழிகாட்டு; பின்தொடராதே!

தொழிலதிபர் ரத்தன் டாடா இறந்து போன செய்தி பெரும்பான்மை இந்திய மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. வழக்கமாக ஒரு நிறுவனத்தைச் சார்ந்த பெரிய தலைவர் இறந்தால் அந்நிறுவனத்தின் பங்குகள் விலை வீழ்ச்சியடையும். ஆனால் டாடா நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன. டாடா இறந்த பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் பலர்...

Read More
சந்தை

இந்தியா-பாகிஸ்தான்: அரிசிச் சந்தை குஸ்திகள்

இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுமதித் தடைகளை நீக்கியதால் அரிசி ஏற்றுமதிப் போர் சூடுபிடித்துள்ளது. இந்த இரு நாடுகளும் விலை உச்சவரம்புகளை அகற்றி அரிசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு நகர்வுகளை மேற்கொண்டதை அடுத்து கடந்த வாரம் திங்கள் கிழமை பல்வேறு வகையான அரிசிகளுக்கான உலகளாவிய விலைகள் வீழ்ச்சியடைந்தன...

Read More
இந்தியா

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: வெல்லவிருப்பது யார்?

ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைவிடத் தேர்தல் வெற்றிகரமாக நடப்பதே முக்கியமான செய்தியாகும் அளவுக்கு நீண்ட இடைவெளி. இங்கு, பத்தாண்டுகளுக்குப் பிறகு மூன்று கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடந்துள்ளது. சில பல அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு நடைபெறும்...

Read More
இந்தியா

ஏடிஎம்மில் ரேஷன் கடை

ஏடிஎம் எந்திரத்தில் பற்று அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். சில ஏடிஎம் டெபாசிட் எந்திரம் மூலம் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம். பெரும்பாலான இந்தியர்கள் ஏடிஎம் எந்திரத்தை இந்தளவுதான் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இனி நியாயவிலைக் கடையில் விற்பனை செய்யும் உணவு தானியங்களை ஏடிஎம் எந்திரத்தில்...

Read More
இந்தியா

ஒழுங்கைத் தூக்கி விழுங்கு!

இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான (SEBI) செபியின் தலைவர் மாதபி புரி புச் மீது கடந்த மாதத்தில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பங்குச் சந்தைத் தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தை எத்தனையோ காரணிகளால் மாற்றத்துக்கு உள்ளாகும். ஆனால் தற்போது...

Read More
இந்தியா

கொத்தடிமைகளாகும் இந்தியர்கள்

‘தனிமையில் இருக்கிறீர்களா? பேச்சுத் துணைக்கு யாருமில்லையா? உங்களுக்கு விருப்பமான பெண்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் தனிமையை விரட்டுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்’ இப்படி வரும் பாப்-அப் விளம்பரங்களில் மயங்கிப் பணத்தை இழப்போர் ஏராளம். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அது போன்ற செயலிகளையும்...

Read More
விளையாட்டு

வெல்லப் பிறந்தவர்கள்

2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டியின் தொடர்ச்சியாக பாராலிம்பிம்க் போட்டிகளும் நடந்தன. மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் இவை. இந்திய பாராலிம்பிக்ஸ் வீரர்கள் பல பதக்கங்கள் வென்றுள்ளனர். விளையாட்டை ரசிக்கும் இந்தியர்கள் இதனால் கூடுதல் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாரீஸ்...

Read More
இந்தியா

கப்பு படிப்பு முக்கியம் பிகிலு

2023-24 கல்வியாண்டில் அறுபத்தைந்து லட்சம் மாணவர்கள் பத்தாவது, பன்னிரண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது தேசியக் கல்வி அமைச்சகம். தேசியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களைவிட மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் தோல்வி விகிதம் அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!