தமிழ் சினிமா உலகம் இன்று அரசியல் ஜெயண்ட்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், கோடம்பாக்கத்தில் நிஜமான ஜெயண்ட்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களின் ஏவிஎம் ஸ்டுடியோஸ், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏவிஎம் தலைமுறைகளுக்கு முக்கியமான இடம் உண்டு.
மெய்யப்ப செட்டியாருக்கு முருகன், குமரன், சரவணன், பாலசுப்ரமணியன் என்று நான்கு புதல்வர்கள். ஆனாலும், மெய்யப்ப செட்டியாருக்குப் பிறகு, ஏவிஎம் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ஏவிஎம் சரவணன்தான். ‘எங்கள் அப்பா ஒரு ‘பர்ஃபெக்ஷனிஸ்ட்’ என்று அடிக்கடி சொல்லுவார் சரவணன். உண்மையில் பார்த்தால் அப்பாவைப் போலவே அவரும் ஒரு ‘பர்ஃபெக்ஷனிஸ்ட்’தான்.
அவரது திட்டமிடல், சொல், செயல் எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். சினிமா உலகத்தில் இத்தகைய மனிதர்களைக் காண்பது வெகு அபூர்வம். அவரோடு ‘ஒன்- டு – ஒன்’ பேசிக்கொண்டிருப்பது மிகவும் இனிய அனுபவம். தனக்குத் தெரிந்த, தான் பழகிய, ஏவிஎம் படங்களில் பணியாற்றிய மனிதர்கள் என்று பலரைப் பற்றியும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். அவற்றில் பல பலரும் அறியாத விஷயங்களாக இருக்கும்.















Add Comment