Home » பீம்சிங் 101
வெள்ளித்திரை

பீம்சிங் 101

பீம்சிங்

ஒரு சினிமான்னா எல்லோரும் குடும்பத்தோடு வந்து பார்க்கும்படி இருக்கணும்.

மேலோட்டமாக பார்க்கும்போது இது ஒருவரித் தகவல். ஆனால் இயக்குநர் பீம்சிங்குக்கு இதுதான் தாரக மந்திரம். தான் இயக்கிய அத்தனை திரைப்படங்களுக்கும் இதையே அடித்தளமாக வைத்துக்கொண்டு, கலைநயமிக்க பல வெற்றித் திரைப்படங்களைக் கட்டி எழுப்பினார் இயக்குநர் பீம்சிங். 15-10-1924 அன்று பிறந்த பீம்சிங்குக்கு இந்த அக்டோபர் மாதம் 101ஆவது பிறந்தநாள். இன்று அவர் நம்மிடையே இல்லாதபோதும், சினிமா ரசிகர்கள் இன்றும் அவரைக் கொண்டாடுகிறார்கள்.

ஆந்திரப்பிரபா எனும் தெலுங்குப் பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தனது கலைப்பயணத்தைத் தொடங்கினார் பீம்சிங். அப்போது உருவான சினிமா ஆசையில் அங்கிருந்து சென்னைக்கு வந்து, இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவிடம் முதலில் துணை எடிட்டராக வேலைக்குச் சேர்ந்தார். பின்பு படிப்படியாகத் துணை இயக்குநராகி, இயக்குநராகவும் உயர்வு பெற்றார்.

இவர் இயக்கிய முதல் திரைப்படம் செந்தாமரை. ஆனால் அது வெளிவருவதற்குப் பல ஆண்டுகள் காலதாமதம் ஆனது (கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள்). எனவே, செந்தாமரை வெளிவருவதற்கு முன்பே அம்மையப்பன் என்றொரு திரைப்படத்தை இயக்கினார். அதன் பின்பு ராஜாராணி என்றொரு திரைப்படம். இரண்டுமே தோல்விப் படங்களாயின. ஆனாலும் மனம் தளராமல் அந்தத் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அவர் அடுத்ததாக இயக்கிய திரைப்படம் பதிபக்தி. அது வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்பு இரண்டு படங்களை இயக்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!