மனதுக்கு மிகவும் பிடித்த வேலை, அந்த வேலை உங்களுக்கே கிடைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். இந்த வேலைக்கு நீங்கள் ஏன் தகுதியானவர்கள் என்று ஒரு நிமிடத்தில் சொல்லுங்கள் என உங்களையும் உங்களுக்குப் போட்டியாளராக இருக்கும் ஒருவரையும் கேட்கும் போது அந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வீர்கள்?
தொடர்பே இல்லாமல் நான் சிறப்பாகக் கோலிக்குண்டு விளையாடுவேன் என்று வீரவசனம் பேசினால் அந்தப் பணி இருவரில் யாருக்காவது கிடைக்குமா? அது நேர்காணல் செய்யும் ஒருவருக்கு எத்தனை பெரிய அவமரியாதை?
ஆனால் நாட்டின் மிகப் பெரிய அதிபர் வேலைக்குப் போட்டி போடும் இருவர், அந்தப் பணியைத் தங்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்று கடைசி ஒரு நிமிடத்தில் சொல்லச் சொன்னபோது அவர்களின் கால்ஃப் விளையாட்டு பெருமையைப் பேசியதுதான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் முதல் நேரடி அதிபர் தேர்தல் விவாதத்தில் நடந்தது.
உலகின் மிகப் பெரிய வல்லரசின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் இருவரில் ஒருவருக்கு என்ன பேசுகிறோம் என்பது புரியவில்லை இன்னொருவர் சொன்னதெல்லாம் பொய்களின்றி வேறு இல்லை.
Add Comment