ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை ‘நன்றி நவிலல்’ (Thanksgiving) விழாவாக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. விழா கொண்டாட்டங்கள் முடிந்து அன்றைய வான்கோழி விருந்தை ரசித்து ருசித்துச் சாப்பிட்டு விட்டு, அடுத்த நாள் குளிர்கால விடுமுறைக்காகப் பொருட்களைத் தள்ளுபடி சலுகைகளில் பெற வணிக வளாகங்களை முற்றுகையிடுவது அமெரிக்காவில் கலாசார மரபாக மாறியுள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற இடங்களில் இந்த நாளை மிகப்பெரிய விற்பனை மற்றும் தள்ளுபடி நாளாகக் கொண்டாடுகின்றனர். ஆண்டு இறுதியில் உலகைக் கலக்க விற்பனைச் சூறாவளியாகக் களமிறங்கும் பிளாக் ஃப்ரைடேவுக்குச் சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி உண்டு.
தொடக்கத்தில் பிளாக் ஃப்ரைடே என்ற சொல் நன்றி நவிலல் நாளுக்கு அடுத்து வரும் விற்பனை நாளைக் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. இது அமெரிக்க வரலாற்றில் பதிவான கடும் நெருக்கடி நாளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, 1869ஆம் ஆண்டு செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட அமெரிக்காவின் தங்கச் சந்தையில் சரிவு ஏற்பட்ட நாளின் பெயர்தான் பிளாக் ஃப்ரைடே.














Add Comment