Home » ப்ரோ – 22
தொடரும் ப்ரோ

ப்ரோ – 22

பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் பெரும்பான்மை இனத்தின் அதிபரோ, பிரதமரோ அவ்வினத்தவரால் கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டாடப்படும் போது, சிறுபான்மையினரால் புறக்கணிக்கப்படுவது என்பது அத்தேசம் தோல்வியடைந்ததற்கான அடையாளங்களில் ஒன்று. இலங்கையைச் சிங்கப்பூர் ஆக்கப் போவதாய்ச் சொல்லாத அரசியல்வாதிகள் எவருமில்லை.1950-களில் வெறும் சதுப்பு நிலமாய், இலங்கையைவிட ரொம்பப் பின்தங்கி இருந்த தேசத்தின் நிகழ்காலப் பொருளாதார வாளிப்பு மட்டுமே அனைவருக்கும் தெரிந்து இருந்தது. ஆனால் சிங்கப்பூரின் ஆதாரக் கட்டுமானமான இன நல்லிணக்கம் பற்றி வாய் திறக்க யாருமில்லை. மகிந்த ராஜபக்சே இதை எல்லாம் தாண்டி, இலங்கையை ஆசியாவிலேயே ஆச்சர்யமாக்கப் போவதாய்ச் சொல்லத் தொடங்கினார்.

2005-ம் ஆண்டு பதவிக்கு வந்தது முதலே இந்தியாவைக் குப்புறத் தள்ளிவிட்டு சீனாவை நெருங்க ஆரம்பித்து இருந்தார் மகிந்த. சீனாவும் இந்து மகா சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவமிக்க இடத்தில் அமைந்திருந்த இலங்கையைச் சுருட்டிப் பாக்கட்டில் போட்டுக் கொள்ள இதைவிட்டால் வேறு சந்தர்ப்பமில்லை என்று ஓடி வந்து கேட்டதையும் கேட்காததையும் அள்ளிக் கொடுக்கத் தொடங்கியது. நாட்டுக்குத் தேவையா, இல்லையா, முக்கியத்துவமிருக்கிறதா, என்றெல்லாம் பார்க்கவில்லை. போதாக்குறைக்கு ஒவ்வொன்றும் பெரும் வட்டிவீதப் ப்ராஜக்டுகள். எக்கச்சக்கமாய்க் கமிஷன் பணம் ஊழல் வெள்ளமாய்ப் பாய்ந்தது. உதாரணத்திற்கு விமான நிலைய நெடுஞ்சாலையின் ஒரு கிலோ மீட்டருக்கு அப்போது செலவான பணம் உலகத்திலேயே அதுவரை நிர்மாணிக்கப்பட்ட வீதி அபிவிருத்திகளுடன் ஒப்பிடும் போது அதிக செலவு பிடித்த ஒன்று என்று சொல்லப்பட்டது. புரிகிறதா..? ராஜபக்சே குடும்பம், ஜார் மன்னர்கள், முகாபே போன்றோரின் வழியில் சாயத் தொடங்கிய ஆரம்பப் புள்ளி இது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!