இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் மிக முக்கிய சக்திகளுள் புத்த பிக்குகளும் அடங்குவர். ஆனால் எல்லா பிக்குகளும் அரசியல் ஆர்வலர்கள் அல்லர். எளிய துறவு வாழ்வு மேற்கொண்டு, பிட்ஷை எடுத்து உண்டு, நற்சொல் பேசி வாழும் பிக்குகள் அநேகர். அத்தகைய அமைதி பிக்குகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
மாளிகாவத்தை போ செவன விகாரையின் விகாராதிபதி பூஜ்ய கொடபிட்டியே இந்தானந்த ஹிமி என்ற இந்தத் தேரர் பேசுவதைக் கேளுங்கள்:
‘நான் பதினான்கு வயதில் துறவு பூண்டேன். சிறு வயதில் இருந்தே எல்லோருக்கும் நிறைய உதவிகளைச் செய்வேன். இப்போது நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன. இந்தத் துறவு வாழ்க்கையின் மீது எனக்கு எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. எனது கடமைகளை நிறைவாகச் செய்திருப்பதாக உணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.’
தான் ஏற்றுக் கொண்ட துறவு வாழ்க்கையை மிகவும் நேசிக்கிறார் இவர். இலங்கையின் தென் பகுதியைச் சேர்ந்த மாத்தறை, அக்குரஸ்ஸ இவரது ஊர். உயர்கல்விக்காக இவர் கொழும்புக்கு வந்திருக்கிறார். ஊரில் அனைவரும் ஒரே குடும்பமாகப் பழகியிருந்தார்கள்.
ஆனால் தலைநகர் கொழும்பில் காணப்பட்ட இன, மத, மொழி, வர்க்க வேறுபாடுகளை ஜீரணிக்க முடியவில்லை இவருக்கு. அதைவிடவும், துறவிகள் தங்குவதற்கு ஓரிடம் இல்லை என்பது கவலையாக இருந்திருக்கிறது. தன்னைப் போன்று உயர்கல்விக்காக கொழும்பு வருவோரும் தங்குமிடம் இல்லாமல் சிரமப்படுவதைக் கண்டார் இந்தானந்த தேரர். அந்தக் கவலையை நிவர்த்திக்கும் பொருட்டு, தானே இந்த மாளிகாவத்தை விகாரையை உருவாக்கியதாகச் சொன்னார்.















Add Comment