14. தன்னம்பிக்கை
ஆப்பிரிக்கக் காடுகளில் எருமைகளின் முக்கியமான எதிரி சிங்கங்கள் என்று சொல்லப்படுகிறது. சிங்கங்களைப் பொறுத்தவரை எருமைகள் உணவு. எருமைக் கூட்டத்தைத் தாக்கும்போது பலவீனமான எருமையையோ அல்லது முதிர்ச்சி அடையாத இளம் எருமையையோதான் சிங்கங்கள் குறிவைப்பதுண்டு. ஒரு முழுமையாக வளர்ச்சி அடைந்த எருமையைச் சிங்கத்தால் தனியாக வெல்வது சிரமமான காரியமாகும். சில வேளைகளில் சிங்கத்தை எருமை துரத்தும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. தனது பலத்தின் மீதும் தலையிலிருக்கும் கொம்பின் மீதும் உள்ள தன்னம்பிக்கையை வைத்தே எருமை சிங்கத்தை எதிர்கொள்கிறது.
எருமையைப் போல மனிதர்களுக்கும் தன்னம்பிக்கை அவசியமானதாகும். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் வாழ்க்கையில் பல சிரமங்களைச் சந்திக்க நேரும். அத்துடன் மன உளைச்சலுக்கும் உள்ளாவார்கள். தன்னம்பிக்கை பற்றி இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
முதலாவது உதாரணமாக ஓர் ஆய்வு மாணவன் சந்திக்கும் பிரச்சினையைப் பார்ப்போம். பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் துறை ஒன்றில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்துகொண்டிருக்கும் மாணவன் அவனது மேற்பார்வையாளராக இருக்கும் பேராசிரியரைச் சந்திக்கிறான். அவர் ஏதோ ஒரு புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். மாணவன் தனது மனத்தில் தோன்றியுள்ள ஒரு பொறிமுறையைச் சொல்கிறான். அவர் புத்தகத்தின் மேலுள்ள பார்வையினை எடுக்காமலே அவனுக்கு அது சரி வராது என்று பதில் சொல்கிறார்.
Add Comment