Home » கோயிலுக்காக ஒரு (அக்கப்) போர்
உலகம்

கோயிலுக்காக ஒரு (அக்கப்) போர்

அமைதிப் பேச்சுக்குப் பிறகு...

கம்போடியா ஏவுகணைகளைக் கொண்டு தாய்லாந்து மீது தாக்குதல் நடத்தியது. தாய்லாந்து தனது F-16 ரகப் போர் விமானங்களைக் கொண்டு கம்போடியாவில் குண்டு வீசியது. கடந்த ஜூலை 25ஆம் தேதி காலையிலிருந்து அங்கே நடக்கும் தாக்குதல்கள் குறித்த செய்திகள் வந்துகொண்டே இருந்தன. சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் போர்நிறுத்த மீறல்கள் குறித்த புகார்களைச் சொல்லிவருகின்றன. இவர்கள் இப்படி எல்லைப்பகுதிகளில் அடித்துக்கொள்வது இது முதல் முறை அல்ல. இது எதிர்பாராமல் திடீரென நடந்த ஒன்றும் அல்ல. அப்படி அங்கு என்னதான் பிரச்சினை?

தற்போதைய சண்டைக்கான தொடக்கம் பிரசாத் தா முன் தோமில் கம்போடியா சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் என்றாலும், அதன் தொடக்கப்புள்ளி கமேர் ராஜ்ஜியக் காலம். ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி அடுத்த ஆறு நூற்றாண்டுகள் கமேர் ராஜ வம்சத்தினர் கிட்டத்தட்ட முழு தென்கிழக்கு ஆசியாவையே ஆண்டு கொண்டிருந்தனர். அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட அங்கோர் வாட், ப்ரீஹ் விஹார் உள்ளிட்ட கோயில்கள் இந்து, புத்தச் சமய அடையாளங்களுடன் இன்றைக்கும் இருக்கின்றன. இதில் டாங்க்ரெக் மலைத்தொடர்களில் கட்டப்பட்ட ப்ரீஹ் விஹாரை சுற்றிய இடம் பெரும்பாலான காலங்களில் சயாம் (தாய்லாந்து) மன்னர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளது. சயாம் என்பது தாய்லாந்தாக மாறிய பின்னரும் இந்தப் பகுதி அவர்களிடமே இருந்தது.

இந்த சயாம் மன்னர்களின் தொந்தரவுகளைச் சமாளிக்க, ஃபிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார் அப்போதைய கம்போடிய இளவரசர். அடுத்த சில வருடங்களில் ஃபிராங்கோ-சயாமீஸ் போருக்குப் பிறகு, 1904ஆம் ஆண்டு சயாமுக்கும்-ஃபிரெஞ்சு குடியேற்ற காலனியாக இருந்த கம்போடியாவுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, 1907 இல் ஃபிரெஞ்சு சர்வேயர்கள் இரு நாடுகளையும் அடையாளப்படுத்த, தோராயமான எல்லைக்கோடு ஒன்றைப் போட்டார்கள். அப்பகுதி அடர்வனம் நிறைந்த மலைத்தொடர்கள் என்பதால், தெளிவாக எல்லைகளை வகுப்பதில் சவால்கள் இருந்தன. வாட்டர்ஷெட் முறைப்படி எல்லைக்கோட்டைப் போடலாம் என இரு தரப்பும் சம்மதித்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!