கோடை வந்துவிட்டது. எங்கெங்கும் விடுமுறைக் காலம். அவரவர் வசதிக்கேற்ப சுற்றுலாத் திட்டங்களைப் போடத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். இப்போதே உலகெங்கும் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு புதிய உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
எல்லாம் நல்லதுதான். சுற்றுலா என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் நல்ல வருமானம் தருகிற துறை. மக்களுக்கு மகிழ்ச்சி, அரசுக்கு அதைவிட மகிழ்ச்சி. அவ்வளவுதானே, என்றால் அதுதான் இல்லை. இந்தப் பயணிகளின் எண்ணிக்கை அளவை மிஞ்சிப் போவதற்கு வேறொரு விவகார விளைவும் நேர்கிறது.
ஸ்பெயின் நாட்டில், கேனரி தீவில் ஒரு பெண் சுற்றுலாவுக்காக வந்த நபரிடம் கடிந்து கொள்கிறாள். சரி, அந்தப் பெண்ணுக்கு வேறு ஏதாவது பிரச்சனையாக இருக்கும் என்று, அந்த நபர் டிப்ஸ் அதிகமாகக் கொடுத்து நகர்கிறார். அடுத்தவர் முகமும் வாடி உள்ளது, பார்த்தால் பாதி ஊரே வாடித்தான் இருக்கிறது. அத்தனை பேருக்கும் டிப்ஸ் தந்து மாளாது.
சுற்றுலா செல்லும் இடம், நமக்கு வாழ்நாளின் முக்கிய அனுபவமாக இருந்தாலும். அங்குள்ள மக்களுக்கு நாம் லட்சத்தில் ஒன்று தான். இருப்பினும். நமக்கு சுற்றுலா தரும் இன்பம்போல், அவர்களுக்கு சுற்றுலா தானே வாழ்வாக இருக்க வேண்டும். பிறகு ஏன் ஒரு விரக்தி அவர்களின் முகங்களில்?
Add Comment